விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார்.
தமிழ்நாட்டில் விஷச் சாராயம் அருந்தி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். விஷச் சாராயத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழக பாஜக குழுவினர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று காலை 10 மணிக்கு சந்தித்தனர். கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.