fbpx

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் மரண தண்டனை.. புதிய சட்டம் நிறைவேற்றம்.. எந்த நாட்டில் தெரியுமா..?

உகாண்டாவில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

உகாண்டா உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் ஏற்கனவே ஓரினச்சேர்க்கை உறவுகளை தடை செய்துள்ளன. இந்நிலையில் உகாண்டா பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. அதன்படி லெஸ்பியன், ஓரினச்சேர்க்கை, இருபாலினம், திருநங்கைகள் மற்றும் விசித்திர பாலின உறவுகள் சட்ட விரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஓரினச்சேர்க்கை மட்டுமின்றி, ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பது மற்றும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கான சதித்திட்டம் ஆகியவற்றை இந்த புதிய சட்டம் தடை செய்கிறது. இந்த சட்டத்தை மீறி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை, மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில் சட்டத்தில் செய்யப்பட்டுள்ளது..

இந்த மசோதா மீது உரையாற்றிய உகாண்டா எம்.பி டேவிட் பஹாட்டி மசோதா ” இருக்கிறார். நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான மசோதாவை நான் ஆதரிக்கிறேன்.. இது நமது தேசத்தின் இறையாண்மை பற்றியது.. யாரும் எங்களை அச்சுறுத்த வேண்டாம், யாரும் எங்களை மிரட்ட வேண்டாம். இந்த சட்டம் சட்டமாக கையெழுத்திட ஜனாதிபதி யோவேரி முசெவேனிக்கு அனுப்பப்படும்..” என்று தெரிவித்தார். LGBTQ நடவடிக்கைகள் நாட்டில் பழமைவாத மற்றும் பாரம்பரிய மதிப்புகளை அச்சுறுத்துவதாகவும், அவற்றில் ஈடுபடுவோரை தண்டிக்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்..

இதனிடையே கடந்த சில வாரங்களாக உகாண்டா காவல்துறை அதிகாரிகள் LGBTQ நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.. அந்த வகையில், உகாண்டாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜின்ஜா மாவட்டத்தில் ஒரு இடைநிலைப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.. மேலும் இளைஞர்களை ஆபாச செயல்களில் தீவிரமாக ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை நேற்று முன் தினம் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Maha

Next Post

இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் சேர்க்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை பரபரப்பில் மருத்துவமனை…..!

Wed Mar 22 , 2023
சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அவர் நெஞ்சுவலி காரணமாக, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சனையின் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்து வந்த அவருக்கு லேசான நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் […]

You May Like