Death sentence: ஏழு மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொல்கத்தா போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு கொல்கத்தாவின் பர்டோலா பகுதியில் அமைந்துள்ள ஒரு சாலையோர குடிசையில் இருந்து 7 மாத குழந்தை காணாமல் போனது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர், பின்னர் குழந்தை அருகிலுள்ள ஒரு நடைபாதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், கோஷை போலீசார் அடையாளம் கண்டனர். மேலும் கோஷ் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லவ்பூரில் இருந்து கைது செய்யப்பட்டான். விசாரணையில், அன்றிரவு குடிசையிலிருந்து தூங்கிக் கொண்டிருந்த பாதிக்கப்பட்ட குழந்தையை கடத்திச் சென்று, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
போக்சோ சட்டம், 2012 இன் பிரிவு 137 (2) (கடத்தல் தண்டனை), பிரிவு 65 (2) (பாரதிய நியாய சன்ஹிதா மீதான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை மற்றும் பிரிவு 6 ஆகியவற்றின் கீழ் அவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொல்கத்தாவில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தது. குற்றம் நடந்த தேதியிலிருந்து 26 நாட்களுக்குள் போலீசார் விசாரணையைத் தொடங்கி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றவாளி ராஜீவ் கோஷ், கைதான நாளிலிருந்து 75 வது நாளில் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க நீதிமன்றங்கள் கடந்த ஆறு மாதங்களில் வழங்கிய ஏழாவது மரண தண்டனை இதுவாகும். மேலும் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆறாவது துாக்கு தண்டனை இதுவாகும்.
Readmore: பகீர்!. குடியிருப்புக்குள் புகுந்த ராட்சத மலைப்பாம்பு!. பீதியடைந்த மக்கள்!. எடை எவ்வளவு தெரியுமா?.