கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரையில் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஆயிரற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவில் இதுவரை 146 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளனது. தற்போது தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள், மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு விரைந்துள்ளனர்.
மாவட்டத்தில் மருத்துவக் குழுக்கள் உட்பட மொத்தம் 225 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் சுமார் 140 ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளது. இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள், ஒரு எம்ஐ-17 மற்றும் ஒரு ஏஎல்எச் (அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்) ஆகியவை மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் குழுவும் மீட்புப் பணிகளுக்கு உதவும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக புதுதில்லியில் இருந்து பல மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக NDRF பணியாளர் ஒருவர் மேற்கோள் காட்டி ANIas தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. அவசர உதவிக்காக 9656938689 மற்றும் 8086010833 என்ற ஹெல்ப்லைன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
Read more ; 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் 4வது நாளில் இந்தியா எப்படி செயல்பட்டது? முழு விவரம் உள்ளே..