தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
வாரிசு படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது, 2 வருடங்களாக விஜயின் பேச்சை கேட்க ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த விழாவில் விஜய் பெரும் விருந்தையே அளித்தார் என்றால் மிகையாகாது.
மேலும் தற்போது விஜய் ரசிகர்களுக்கு நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வாரிசு படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி குறித்த தகவல் வந்துள்ளது. அதன்படி டிசம்பர் 31-ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த புத்தாண்டுக்கு ரசிகர்களுக்கு தளபதியின் பாரிசாக வாரிசு ட்ரைலர் வெளியாகவுள்ளது.