fbpx

ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கும் 6 மாவட்ட செயலாளர்களை நீக்க முடிவு..! எடப்பாடி பழனிசாமி அதிரடி..!

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் 6 பேரை அதிரடியாக நீக்க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கட்சி பணிகளில் தன்னிச்சையாக செயல்பட தொடங்கி உள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னணி நிர்வாகிகளுடன் தனது வீட்டிலேயே தினமும் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 69 பேர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர். 6 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

அரசியல் நாகரீகத்தோடு ஒற்றுமையாக செயல்படுவதே பெருந்தன்மை ..ஓபிஎஸ் அணி | Team  OPS not happy with EPS team - Tamil Oneindia

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள அசோகன், தேனி மாவட்ட செயலாளரான சையதுகான், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் எம்.ஜி.சுப்பிரமணியன் ஆகிய 6 பேர் மட்டுமே மாவட்ட செயலாளர்களில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து வருகின்றனர்.

ஓபிஎஸ்-ஐ நீக்கிய இபிஎஸ்... இபிஎஸ்-ஐ நீக்கிய ஓபிஎஸ்... அதிமுக பொதுக்குழு  களேபரங்கள்! | OPS Expelled eps and eps expelled ops from the admk party

ஓ.பன்னீர்செல்வம் கட்சி பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வரும் இந்த 6 மாவட்ட செயலாளர்களையும் அதிரடியாக நீக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக இவர்களின் பதவியை மட்டும் பறிக்க முடிவு செய்துள்ளதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இவர்கள் உடனடியாக நீக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

AIADMK : அதிமுக பொதுக்குழு நடக்கக்கூடாது..காவல்துறைக்கு மனு கொடுத்த  ஓபிஎஸ்.! மீண்டும் பரபரப்பு

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அந்த புதிய 6 மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். கன்னியாகுமரி, தேனி, திருச்சி, பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னணி நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் புதிய பதவியை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த 5 மாவட்டங்களிலும் வேகமாக செயலாற்றக் கூடியவர்களையே மாவட்ட செயலாளர்களாக நியமிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ்ஸின் செல்வாக்கை இந்த மாவட்டங்களிலும் குறைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.

Chella

Next Post

இலங்கையில் பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு.. அரசு அறிவிப்பு..

Thu Jul 14 , 2022
இலங்கையில் பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.. வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதனிடையே தனது குடும்ப […]

You May Like