fbpx

கன்னியாகுமரி: பூட்டிய வீட்டில் அழுகிய ஆண் சடலம்..!! கொலையா.? தற்கொலையா.? போலீஸ் விசாரணை.!

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் தாமரை குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்தாமரைகுளம் வடக்கு கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். 47 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தீராத மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் அவரது மனைவி இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார் ஜெயன். சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் மது போதையில் வந்து வீட்டில் உறங்கி இருக்கிறார். மறுநாள் அவர் வெளியே வரவில்லை. மேலும் அவரது வீடு பூட்டியே இருந்திருக்கிறது. அவரது வீட்டில் இருந்து துர்நாற்றமும் வீசி உள்ளது . இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கருங்கல்லில் உள்ள அவரது சகோதரிக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரது சகோதரி வந்து பார்த்தபோது ஜெயன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரித்து வருகிறது.

Next Post

"இஸ்லாமிய வாக்குகளை குறி வைக்கும் அதிமுக.." SDPI கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை.! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Tue Feb 6 , 2024
இந்தியாவில் பாராளுமன்றங்களுக்கான பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் முடிவடைய இருப்பதை தொடர்ந்து பாராளுமன்றங்களுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை […]

You May Like