fbpx

இனி அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்..!! தமிழ்நாடு அரசின் புதிய வசதியை பாருங்க..!!

பத்திரப்பதிவு, மின் இணைப்பு, குடிநீர் வரி, சொத்துவரி போன்ற சேவைகளை எளிமைப்படுத்த தமிழ்நாடு அரசு புதிய வசதியை செய்து தரப்போகிறது.

பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. அந்தவகையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலக பணிகளும் இப்போது ஆன்லைன் மயமாகிவிட்டன. இதனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியதில்லை.

பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை, யாருக்கும் எந்த கமிஷன் பணமும் தர வேண்டிய அவசியமுமில்லை. லஞ்சம் தந்து சான்றிதழ்களை பெற வேண்டிய தேவையுமில்லை, எதுவானாலும் அனைத்தையுமே ஆன்லைன் மூலமே செய்து கொள்ள முடியும். அந்தவகையில்தான், பட்டா மாறுதல், பட்டா பெயர் மாற்றம் போன்றவைகளும் ஆன்லைன் மூலமே நடந்து வருகின்றன.

இப்படி தனித்தனியாக சேவைகள் இல்லாமல், அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து எளிதாக மக்களுக்கு சேவை வழங்கும் பணிகளை தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. காரணம், அரசு நிர்வாகத்தில் பொதுமக்கள் – அதிகாரிகள் இடையே 3ஆம் நபர் தலையீடு இருக்க கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதை மையமாக வைத்துதான், அடுத்தக்கட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன.

உதாரணத்துக்கு, https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்தில் நிலம் தொடர்பான பட்டா, சிட்டா, வரைபடம், பட்டா பெயர் மாற்றம் ஆகிய சேவைகளை கட்டணமின்றி பெறலாம். ஆனால், பொதுமக்கள் அதனை பயன்படுத்தாமல், 3ஆம் நபர்கள் மூலம் பணம் கொடுத்து பெறுகின்றனர். தற்போதைய சூழலில், நிலம் மற்றும் அது தொடர்பான பிற சேவைகள், பத்திரப்பதிவு, பட்டா சேவைகள், நிலம் தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் கண்டறிய அதற்கென உள்ள இணையதளத்திலும், சொத்து வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு விவரம் அறிந்துகொள்ள அதற்கென உள்ள இணையதளம் என ஒவ்வொரு இணையதளமாக தேடி தேடிச்சென்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்நிலையில் தான், மேற்கண்ட அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து https://clip.tn.gov.in/clip/index.html என்ற இணையதளத்தை தமிழ்நாடு அரசு வடிவமைத்துள்ளதாம். முழுக்க முழுக்க தொழில் துறையினருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வெப்சைட், விரைவில் செயல்பாட்டுக்கு வரப்போகிறதாம். எப்படியும் 2 மாதத்திற்குள் முழுமையான செயல்பாட்டுக்கு இந்த வெப்சைட் வந்துவிட்டால், அனைத்து சேவைகளுமே பொதுமக்களுக்கு எளிதாகிவிடும்.

Read More : அட்ஜஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகள்..!! செருப்பால அடிக்கணும்..!! கொந்தளித்த நடிகர் விஷால்..!!

English Summary

The Tamil Nadu government is going to provide a new facility to simplify services like deed registration, electricity connection, water tax, property tax etc.

Chella

Next Post

ஷாக்!. வயது ஏற ஏற மனிதர்களின் உயரம் குறைய ஆரம்பிக்கிறதா?. அறிவியல் என்ன சொல்கிறது?

Fri Aug 30 , 2024
Shock!. Does the height of people start decreasing with age? What does science say?

You May Like