fbpx

’அரசியலுக்கு வருவது உறுதி’..!! அதிரடியாக அறிவித்த தாடி பாலாஜி..!! எந்த கட்சியில் இணைகிறார் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராகவும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், இருவரும் பிரிந்து தனியே வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு மகள் இருக்கிறார். அவர் தாயுடன் வசித்து வருகிறார். 

சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி இருந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா, தான் பாஜகவில் விரைவில் இணைய இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள தாடி பாலாஜி, அதுகுறித்து பேசியுள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசுகையில், “நான் அரசியலுக்கு விரைவில் வருகிறேன். அது உறுதி. எந்த கட்சி எனக்கு அங்கீகாரம் தருகிறதோ, அந்த கட்சியில் இணைந்து நான் பணியாற்றுவேன். நானாக எந்த கட்சிக்கும் செல்லமாட்டேன். என்னை அக்கட்சி அழைத்தாள் மட்டுமே போவேன். 

திமுகவில் பெண் கவுன்சிலர்கள் அதிகம் என்றாலும், அவர்களை பணிசெய்ய விடாமல் கணவர்கள் செயல்படுகிறார்கள். பெண் கவுன்சிலர்கள் கணவர்கள் கவுன்சிலராக உள்ளே வருகிறார்கள்.  அவ்வாறு நான் செயல்படமாட்டேன். ஒருவேளை அது குறித்து புகார் எழுந்து உண்மை நிரூபணமானால் கட்சியில் இருந்து நீக்கம் செய்யலாம்” என தெரிவித்துள்ளார். 

Chella

Next Post

’இனி புகார் தெரிவிக்க அலைய வேண்டியதில்லை’..!! அனைத்து வீடுகளிலும் கியூஆர் கோடு..!!

Sat Jul 15 , 2023
கடலூர் மாநகராட்சியில் குப்பைகளை அகற்றுதல், கால்வாய் சுத்தம் செய்தல், தெருவிளக்கு எரிய வைத்தல், சாலை பராமரிப்பு, சாக்கடை சுத்தம் செய்தல், வரி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளைப் பெற பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து புகார் தெரிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், தற்போது அந்த சிரமங்களை குறைக்கும் வகையில், கியூஆர் கோடு எனும் அட்டை அனைத்து வீடுகளிலும் ஒட்டப்பட உள்ளது. கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள அனைத்து வீடுகளிலும் கியூஆர் […]
’இனி புகார் தெரிவிக்க அலைய வேண்டியதில்லை’..!! அனைத்து வீடுகளிலும் கியூஆர் கோடு..!!

You May Like