fbpx

நீரிழப்பால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

பக்கவாதம் என்பது தமனிகளில் அடைப்பு ஏற்படக்கூடிய அபாயகரமான நிலையாகும், இது இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு சீராக செல்வதைத் தடுக்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நீண்டகால பாதிப்பை கூட பக்கவாதம் ஏற்படுத்தும். நிபுணர்கள் அதை தடுக்கக்கூடிய நுட்பங்களை தொடர்ந்து கொண்டு வரும் நிலையில், புகைபிடிப்பதை கைவிடுவது ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. தற்போது நீரிழப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நீரிழப்பு ஏற்படுவதால் புகைபிடிப்பதைப் போலவே தமனிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று தெரிகிறது.

நீரிழப்பு எவ்வாறு பக்கவாத அபாயத்தை அதிகரிக்கிறது? ஹார்வர்ட் ஹெல்த் கருத்துப்படி, குறைந்த இரத்த அழுத்தம், அடர் நிற சிறுநீர், தலைச்சுற்றல், குழப்பம் மற்றும் பலவீனம் ஆகியவை நீரிழப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாகும். அதைத் தவிர்க்க, ஒருவர் தினமும் குறைந்தது 4 முதல் ஆறு கப் தண்ணீர் குடிக்க வேண்டும். லோமா லிண்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 53 சதவீதம் குறைக்க வேண்டுமெனில், குறைந்தது 5 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். இது பக்கவாதம் ஏற்பட்டால் நோயாளியின் விளைவை மேம்படுத்தலாம்.

2015 ஆம் ஆண்டின் ஆராய்ச்சியின் படி, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் உள்ள விரிவான பக்கவாதம் மையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், நீரிழப்பு நோய் 4 மடங்கௌ அதிகமான அது, கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்கவாதம் நோயாளிகளில் நீரிழப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது..

ஆரோக்கியமான இளைஞர்களில் லேசான நீரேற்றம் கூட இதய நோய் அபாயத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன. இது இரத்த நாளங்களில் உள்ள எண்டோடெலியல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் அதே நேரத்தில், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஆபத்தானது என்பதால், அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்…

Maha

Next Post

என்னது இனி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் இல்லையா...?

Sat Apr 1 , 2023
பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டது.. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. பள்ளியில் லேப்டாப் கிடைக்காத பட்சத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டில் வழங்கப்பட்டு வந்தது. நிதி நிலைமை மோசமாக உள்ள காரணத்தால் தமிழகம் முழுவதும் பல்வேறு […]

You May Like