fbpx

தாமதமாகும் நீட் தேர்வு முடிவுகள்..! பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..! அமைச்சர் அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள 1,58,157 பேர் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். மொத்தம் 1,48,811 இடங்கள் இருக்கின்றன. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு சனிக்கிழமை முதல் இன்று (புதன்கிழமை) வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கி 4 சுற்றுகளாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதை சிறப்பு பிரிவில் நடத்தாமல், பொதுப்பிரிவு கலந்தாய்வு நடத்தும் அதே தேதியில் நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் முடிவு செய்திருந்தது.

தாமதமாகும் நீட் தேர்வு முடிவுகள்..! பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..! அமைச்சர் அறிவிப்பு

இந்நிலையில், நாளை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் தாமதமாவதால் கலந்தாய்வை தள்ளி வைப்பது குறித்து உயர்கல்வித்துறை இன்று ஆலோசனை நடத்தியது. நீட் தேர்வு முடிவுகளுக்கு முன்பாக பொறியியல் கலந்தாய்வை நடத்தினால், தேர்வு முடிவுகள் வெளியான பின் பல இடங்கள் காலியாகும் சூழல் ஏற்படும் என்று பரிசீலித்து வந்தனர். இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பிரிவு கலந்தாய்வு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு இரண்டு நாட்கள் கழித்து பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Chella

Next Post

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக வருகிறது புதிய தொழில்நுட்பம்..! - அமைச்சர் நிதின் கட்கரி

Wed Aug 24 , 2022
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு மாற்று ஏற்பாடுகளை செய்வது தொடர்பான யோசனைகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்வைத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சி மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஆட்டோமேட்டிக் நம்பர் ப்ளேட் ரீடர் கேமராக்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணமும் நேரடியாக வாகன ஓட்டிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும் வகையில் […]

You May Like