Xiaomi மற்றும் WPS செயலியை உடனடியாக தங்களது மொபைல் போன்களில் இருந்து நீக்க மைக்ரோசாப்ட் பரிந்துரை செய்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோர் பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் default ஆப் ஸ்டோராக உள்ளது. அது போக தங்களது தேவைகளுக்கு ஏற்ப செயலிகள் ப்ளே ஸ்டோர் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்படுகிறது. சில ஆப்ஸ் மூலம் புதிய மால்வேர் உங்கள் போன்களில் நுழைந்திருக்கலாம். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் போனின் முழுமையான கட்டுப்பாட்டை நீங்கள் இழந்து விட நேரிடும்.
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் பல பிரபலமான ஆண்ட்ராய்டு செயலில், டர்ட்டி ஸ்ட்ரீம் மால்வேர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மொபைலின் மீது ஹேக்கருக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது. மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தனிப்பட்ட தரவுகளை திருட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
“இந்த பாதிப்பு முறையின் தாக்கங்கள், ஒரு பயன்பாட்டின் செயலாக்கத்தைப் பொறுத்து தன்னிச்சையான குறியீடு செயல்படுத்தல் மற்றும் டோக்கன் திருட்டு ஆகியவை அடங்கும்” என்று மைக்ரோசாஃப்ட் த்ரெட் இன்டலிஜென்ஸ் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன் படி Xiaomi செயலியை 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர். அதே போல WPS 500 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். Xiaomi மற்றும் WPS அலுவலகம் இரண்டும் பாதிப்புகளை மேம்படுத்தல்களுடன் நிவர்த்தி செய்துள்ளன. இருப்பினும், அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களும் தங்கள் சாதனங்களில் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து இருந்தால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய, மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செயலி டவுன்லோடு செய்யும் போது அது உண்மையில் அரசின் செயலியா என்பதை காட்டும். பயனர்கள் சரியான செயலியை தான் டவுன்லோடு செய்கிறார்களா என்பதை அடையாளம் கண்டு செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.