தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், டெல்லி அரசு BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்களை டிசம்பர் 9 வரை நகரில் இயக்க தடை விதித்துள்ளது.
ஜிஆர்ஏபி எனப்படும் திருத்தப்பட்ட தரம் மேம்படுத்தப்பட்ட செயல் திட்டத்தின் துணைக்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், புதுடில்லியின் காற்றின் தரம் மற்றும் மாசுபாட்டின் அளவு குறித்து மதிப்பாய்வு நடத்தப்பட்டது. மதிப்பாய்வில், கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியின் காற்று தரக் குறியீடு மேலும் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2021 டிசம்பர் 4ம் தேதி, டெல்லியின் காற்று தரக் குறியீடு 407 ஆக இருந்ததாக மத்திய மாசுக் கட்டப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரங்களில் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் LMV நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளில் ஓடுவது கண்டறியப்பட்டால், மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 194 இன் கீழ் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.