fbpx

இன்று டெல்லி – குஜராத் அணிகள் மோதல்..!! புள்ளி பட்டியலில் எது டாப் தெரியுமா..?

ஐபிஎல் தொடரின் இன்றைய 40-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் இந்த இரு அணி அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணி மோசமான தோல்வியை பதிவு செய்திருந்தது. அதற்கான பதிலடியை இன்று குஜராத் அணி டெல்லி அணிக்கு திரும்ப கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் மீண்டு வருவதற்கு இந்த போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருவதால், இந்த போட்டியை டெல்லி அணி வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அந்த ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த இரு அணிகளும் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 2 முறை குஜராத் டைட்டன்ஸ் அணியும், 2 முறை டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

2024 ஐபிஎல் புள்ளி பட்டியல் :

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி, அதில் 5இல் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக சன்ரைஸ் அணி விளையாடிய 7 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. லக்னோ அணி விளையாடிய 8 போட்டிகளில் 5இல் வெற்றி பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 8 போட்டிகளில் 4இல் வெற்றி பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த படியாக குஜராத் அணி 6ஆம் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 7ஆம் இடத்திலும், டெல்லி அணி 8ஆம் இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 9ஆம் இடத்திலும் பெங்களூரு அணி 10-வது இடத்திலும் உள்ளது.

Read More : ’ஒருவர் இறந்தால் 45% சொத்து பிள்ளைகளுக்கு’..!! ’55% அரசாங்கத்திற்கு’..!! இந்தியாவில் புதிய சட்டம்..?

Chella

Next Post

எந்த புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் MDH, எவரெஸ்ட் மசாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது? வேறு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்..! முழு விவரம்..!

Wed Apr 24 , 2024
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இந்தியாவில் உள்ள அனைத்து உற்பத்தி அலகுகளிலிருந்தும் மசாலாப் பொருட்களின் மாதிரிகளை சோதனை செய்ய உத்தரவிட்டது. எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய நிறுவனங்கள் சிக்கன்,  மட்டன்,  மீன்,  சாம்பார் உட்பட பல்வேறு உணவுகளை தயாரிக்க மசாலா பொடிகளை விற்பனை செய்து வருகின்றன.  உள்நாடு மட்டுமன்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் அந்த மசாலா பொடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இந்நிலையில்,  எவரெஸ்ட் நிறுவனத்தின் […]

You May Like