fbpx

மிதக்கும் டெல்லி.. வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்!! எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழை நிர் தேங்கி இருக்க, சில இடங்களில் அருவியாய் பாய்ந்தோடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் முழங்கால் உயரத்திற்கும் மேலாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகன ஓட்டிகள் கொட்டும் மழையில் தங்களது வாகனங்களை தள்ளிச் சென்றனர். பாலத்தின் சென்ற காரும் நீரில் மூழ்கிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அன்றாட தேவைகளுக்காக கூட வெளிவர முடியாத சூழல் நிலவுகிறது. கோடை காலம் தொடங்கியது முதலே டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தான் கனமழை கோடி, ஒட்டுமொத்த டெல்லியை யே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

IMD இன் படி, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை வெள்ளிக்கிழமை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும். அடுத்த வாரம் முழுவதும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் வரும் வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பையும் வெளியிட்டுள்ளது, அங்கு வாரம் முழுவதும் மழை பெய்யும் என்று கணித்துள்ளது. 

தேதிகுறைந்தபட்ச வெப்பநிலைஅதிகபட்ச வெப்பநிலைவானிலை
27 ஜூன்28.635.4இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மழை (வேகம் 25-35 கி.மீ.)
28 ஜூன்26.036.0 இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் (வேகம் மணிக்கு 30-40 கிமீ) 
29 ஜூன்28.036.0இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு 
30 ஜூன் 27.033.0இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு
01 ஜூலை27.034.0லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
02 ஜூலை27.033.0பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை.  
03 ஜூலை27.034.0பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மழை.  

English Summary

Delhi NCR battered by incessant rainfall, bringing relief from heatwave

Next Post

காரில் ஏசி போட்டு தூங்குபவரா நீங்கள்? இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க!! மரணம் நிகழும் அபாயம்!!

Fri Jun 28 , 2024
There are reports that there is a risk of death due to sleeping with AC in the car

You May Like