டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாசு அளவு மோசமடைந்து வருவதால், டெல்லி பகுதியில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த நடவடிக்கையால் டெல்லியின் காற்றின் தரம் மேம்பட வாய்ப்புள்ளது. “தேசிய தலைநகரில் காற்றின் தரக்குறியீட்டு 400 என்ற கடுமையான பிரிவில் உள்ளது, தேசிய தலைநகரின் காற்றின் தரம் மேம்படும்” என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை அதிகாரி விஜய் சோனி தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் கடும் சரிவைச் சந்தித்தது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் படி, காலை 7 மணியளவில், காற்றின் தரம் 340 ஆக அளவிடப்பட்டது. நேற்று மாலை காற்றின் தரம் 370 ஆக இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.