மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை.
தேசிய தலைநகரில் ஒலி மாசுபாட்டைக் குறைக்க, டில்லி போக்குவரத்து போலீசார் அதிக அளவில் ஹாரன் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் சிறப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளனர். சைலன்சர்களை மாற்றுவது பதிவுச் சான்றிதழ் (ஆர்சி) மீறலின் கீழ் வருவதால், மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
டில்லி போக்குவரத்து போலீசார் இது குறித்து மக்களுக்கு ட்விட்டரில். ” போக்குவரத்து துறை சார்பில் வாகனங்களில் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், இனி வரும் காலங்களில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்படும் என்று போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி, அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அல்லது மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒலி மாசுபாட்டை உருவாக்குபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு Chalan வழங்கப்படும்” என்று கூறினார்.