fbpx

உஷார்…! கோவையில் டெங்கு காய்ச்சல்… 28 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை…!

கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், கோவையில் மழை பெய்தாலும், வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பருவகால காய்ச்சலுடன் டெங்கு பாதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தண்ணீர் தேங்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

Vignesh

Next Post

தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம்... 70% மாணவர்‌ சேர்க்கை கட்டாயம் இருக்க வேண்டும்...! புதிய விதிமுறை...

Thu Jul 6 , 2023
தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது. தன்னாட்சியை பெற கல்லூரிகள்‌ தொடர்ந்து 10 ஆண்டுகள்‌ செயல்பட்டு இருக்க வேண்டும்‌. முந்தைய 5 ஆண்டுகளில்‌, முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில்‌ 60 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருக்க வேண்டும்‌ என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி நிறுவனத்தின்‌ h-index குறியீடு 10-ல்‌ இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய 3 ஆண்டு […]

You May Like