fbpx

90ஸ் கிட்ஸ் favourite பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருக்கு டெங்கு!

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாசிட்டிவால், உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளை தவறவிட்டார். ஒருவார கால சிகிச்சைக்கு பிறகு 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கில்லை தொடர்ந்து தற்போது இந்திய வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவுக்கும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

90ஸ் கிட்ஸ்களின் விருப்பமான வர்ணனையாளராக இருக்கும் ஹர்ஷா போக்ளே, நடப்பு 2023 உலகக்கோப்பையின் கமெண்டேட்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 14-ஆம் தேதி நடக்கவிருக்கும் மிகப்பெரிய மோதலான இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தவறவிடவிருப்பதாக ஹர்ஷா போக்ளே எக்ஸ் வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் தள பதிவில், 14-ம் தேதி நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை தவறவிடுவதில் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். டெங்கு பாதிப்பு ஏற்பட்டதால், அதன் விளைவாக உடல் பலவீனம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவற்றால் என்னால் பங்குபெற முடியவில்லை. 19ம் தேதி நடக்கும் இந்தியா-வங்கதேச ஆட்டத்திற்கு மீண்டும் திரும்பிவிடுவேன் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Kokila

Next Post

’நீதிமன்றம் எப்படி இதை செய்ய சொல்லும்’..? சில வாரங்கள் காத்திருக்க முடியுமா..? சுப்ரீம் கோர்ட் வேதனை..!!

Fri Oct 13 , 2023
திருமணமான 27 வயது பெண் ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அந்த பெண் 3-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து, அந்த பெண் சில சிரமங்களை சந்திக்க தொடங்கினார். இதனால் அவர் தனது கருவை கலைக்க முடிவு செய்தார். இதையடுத்து, அவர் உச்சநீதிமன்றத்தில் கருவை கலைக்க அனுமதி கோரினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 9ஆம் தேதி கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கியது. ஆனால், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய […]

You May Like