PowerPoint மென்பொருளை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் நுரையீரல் புற்று நோய் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார். அவருக்கு வயது 76.
மைக்ரோசாப்ட் பவர்பாயிண்ட் மென்பொருளானது, ப்ரொஜெக்டர்களில் அல்லது பெரிய திரைத் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் தொழில்முறை தோற்ற ஸ்லைடுகளை உருவாக்க பயன்படுகிறது. இந்த மென்பொருளின் தயாரிப்பு ஒரு விளக்கமாக அழைக்கப்படுகிறது. பவர்பாயிண்ட் என்பது எளிதான கற்றல் திட்டம் ஆகும், இது வணிகங்கள் மற்றும் வகுப்பறைகளில் விளக்கக்காட்சிகளை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகள் மார்க்கெட்டிங், பயிற்சி, கல்வி மற்றும் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக்கூடிய பெரிய பார்வையாளர்களுக்கும் சிறு குழுக்களுக்கும் சமமாக பொருந்தும் மென்பொருளாகும். ராபர்ட் காஸ்கின்ஸ் என்பவர், டென்னிஸ் ஆஸ்டினுடன் இணைந்து இதை உருவாக்கினார். 2000இன் தொடக்கத்தில் மிகவும் பிரபலமாக இருந்த பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார். அவருக்கு வயது 76. நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்டின் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி கலிபோர்னியாவின் லாஸ் ஆல்டோஸில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
கடந்த 1947 ஆம் ஆண்டு, மே 28 ஆம் தேதி, பிட்ஸ்பர்க்கில் பிறந்த ஆஸ்டின், வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். எம்.ஐ.டி மற்றும் யுசி சான்டா பார்பரா உட்பட பல பல்கலைக்கழகங்களில் பொறியியல் பயின்றவர் டென்னிஸ் ஆஸ்டின். இதை தொடர்ந்து, மென்பொருள் நிறுவனமான Forethought இல் மென்பொருள் உருவாக்குநராக இணைந்து, பவர்பாயிண்டை இணைந்து உருவாக்கினார். கடந்த 1987 ஆம் ஆண்டு, பவர்பாயிண்ட் மென்பொருளை Forethought நிறுவனம் அறிமுகம் செய்தது. மைக்ரோசாப்ட் நிறுவனம் சில மாதங்களுக்குப் பிறகு, அதை 14 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. கடந்த 1985 முதல் 1996 வரை பவர்பாயின்ட்டின் முதன்மை டெவலப்பராக இருந்தார். பின்னர், ஓய்வு பெற்றார். 1993ம் ஆண்டில், விற்பனையின் மூலம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான விற்பனையை ஈட்டியது.