பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் கீழ் உள்ள மறுவாழ்வு இயக்குநரகம் (டி.ஜி.ஆர்) மற்றும் மெஸர்ஸ் ஜென்பாக்ட் இந்தியா தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுவாழ்வு இயக்குநரகம் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், பாதுகாப்பு சேவைகளின் மதிப்பிற்குரிய முன்னாள் படைவீரர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க பெருநிறுவனங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை ஒரே தளத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது.
தொழில்முறை சேவைகளில் உலக அளவில் முன்னணி வகிக்கும் ஜென்பாக்ட், முன்னாள் படைவீரர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் . தொழில்துறை மற்றும் பெரு நிறுவனங்களுக்கு நமது முன்னாள் படைவீரர்களின் சிறப்பான பங்களிப்பு கிடைக்கும். நிறுவனங்களுக்கு திறமையான மனிதவளத்தை அளிக்க உதவுதல் மற்றும் நமது முன்னாள் படைவீரர்களுக்கு கண்ணியமான இரண்டாவது வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடைய உதவும்.