fbpx

குறைந்தபட்ச தொகை ரூ.1000…! மகிளா சம்மான் முதலீடு ரூ.130 கோடியை தாண்டியது….!

மகளிர் மதிப்புத் திட்டம்” என்று அழைக்கப்படும் மகிளா சம்மான் சேமிப்புப் பத்திரம் 31.03.2023 அன்று மத்திய நிதி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெண்களுக்கு நிதி அதிகாரமளிக்கும் நோக்கத்துடன் துவங்கப்பட்டது. அதிக வட்டி விகிதத்தை வழங்குவதன் மூலம், இந்தத் திட்டம், பெண்கள் மற்றும் பொது மக்களிடையே விருப்பமான சேமிப்புத் திட்டமாக பிரபலமடைந்துள்ளது.

இது இரண்டு வருட திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் தனக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தையின் சார்பாக பாதுகாவலரோ குறைந்தபட்ச தொகை ரூ.1000 ல் இருந்து நூறு ரூபாய்களின் மடங்குகளில் ரூ.2 லட்சத்திற்கு மிகமால் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டம் 7.5% காலாண்டு கூட்டு வட்டியை வழங்குகிறது. 6 மாதங்களுக்குப் பிறகு எந்த நேரத்திலும் நிபந்தனைகளுடன் கணக்கை முடித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

கணக்கைத் தொடங்கி ஒரு வருடத்திற்குப் பின், கணக்கின் இருப்பிலிருந்து 40% வரை திரும்பப் பெறலாம். மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் ஒரு பாதுகாப்பான முதலீட்டு வழியை வழங்குவதுடன், உங்கள் சேமிப்பை பெருக்கி நிதி இலக்குகளை அடைவதற்கு உதவுகிறது. சென்னை நகர மண்டலம் தபால் நிலையங்களில் மகிளா சம்மான் முதலீடு ரூ.130 கோடியை தாண்டி உள்ளது.

Vignesh

Next Post

கள்ளக்காதலை தொடர மறுத்த பெண்மணி…..! கள்ளக்காதலன் நள்ளிரவில் செய்த காரியம் விருதுநகர் அருகே பயங்கரம்…..!

Wed May 31 , 2023
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45) ,இவர் கட்டிட மேஸ்திரியாக இருந்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (41) இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளிட்ட 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தைச் சேர்ந்த பரமசிவம் (50) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் முறை தவறி உறவாக மாறி, ராஜேஸ்வரியின் கணவர் வேலைக்கு சென்ற […]

You May Like