fbpx

அடுத்த 48 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலம்!!! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தெற்கு வங்கக்கடலில்‌ நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (21-12-2022) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வடமேற்கு திசையில்‌ நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில்‌ தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்‌. அதன்பிறகு இது மேற்கு-தென்மேற்கு திசையில்‌ நகர்ந்து இலங்கை வழியாக குமரிக்கடல்‌ பகுதிகளை நோக்கி நகரக்‌ கூடும்‌.

இதன்‌ காரணமாக, இன்று முதல் வரும் 23-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 24-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 25-ம் தேதி வரை, தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ அநேக இடங்களிலும்‌, வட தமிழக மாவட்டங்கள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்‌ மற்றும்‌ இராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளை பொறுத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

டிசம்பர் 21 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌. டிசம்பர் 22 ஆம் தேதிதென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் டிசம்பர் 23 மற்றும் 24-ல் தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகள்‌, தமிழக கடலோரப் பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ மீ வேகத்திலும் வீசக்கூடும்‌.

டிசம்பர் 25 ஆம் தேதி தென்தமிழக கடலோரப் பகுதிகள்‌, குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடாமற்றும்‌ அதனை ஒட்டிய மேற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ மீ வேகத்திலும் வீசக்கூடும்‌. தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய கிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என கூறப்படுகிறது.

Kathir

Next Post

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் அரிப்புக்கு சிறந்த தீர்வு..! 

Wed Dec 21 , 2022
கர்ப்பிணி பெண்கள் பொதுவாக சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் இந்த அரிப்பும் ஒன்று. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்றுதான் தோன்றுவிடும். ஆனால் இவ்வாறு சொறிவதால் அரிப்பு தான் மேலும் மேலும் அதிகரிக்க செய்கிறது. கரப்பிணி பெண்கள் தனது ஆறாவது மாதம் மற்றும் எட்டாவது மாதத்திலும்  அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிக்கிறார்கள்.  சில சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை அரிப்பு ஏற்படும் வயிற்றுப்பகுதியில் […]

You May Like