பெரியார் பல்கலை. தேர்வு வினாத்தாளில் மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி..!!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேட்கப்பட்ட கேள்வியின் சர்ச்சை அடங்குவதற்குள், மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில், முதுநிலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது. இந்நிலையில், சாதி தொடர்பான கேள்வி கேட்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. பி.ஏ அரசியல் பொருளாதார பாடத்திற்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாட்டில் அண்ணாதுளை ஆட்சியின் சாதனை பற்றி விவாதிக்க என்ற பிழையுடன் வினாத்தாள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

பெரியார் பல்கலை. தேர்வு வினாத்தாளில் மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி..!

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை என்ற பெயரை அண்ணாதுளை என்று பிழையாக அச்சிட்டு, மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அதிமுகவின் தோற்றம் மற்றும் வரலாறு வளர்ச்சி பற்றி வரையறுக்க என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. பி.ஏ. வரலாறு பாடத்தில் கேள்வி வினா பதில்களில் பிரம்ம சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு எவை என்பதற்கான பதிலில் 1822, 1824, 1823, 1825 என்ற தவறான விடைகள் இடம்பெற்றுள்ளன. இதற்கான சரியான பதில் 1828 ஆகஸ்ட் 20 என்பதாகும். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை பாடங்களுக்கான வினாத்தாளில் தவறான பதில்கள் பிழைகளுடன் வெளியாகி உள்ள நிலையில், வினாத்தாள் ஆய்வுக் குழுவின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

பெரியார் பல்கலை. தேர்வு வினாத்தாளில் மீண்டும் ஒரு சர்ச்சை கேள்வி..!

மேலும், பி.ஏ வரலாறு பாடத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியின் அரசியல் குருவான கோபால கிருஷ்ணகோகலே எந்த தலைவராக இருந்தார் என்ற கேள்விக்கு, தீவிரவாதிகள், மிதவாதிகள், பயங்கரவாதிகள், புரட்சிவாதிகள் என விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கேள்விக்கு அளித்துள்ள கொள்குறி வகை விடைகள் சுதந்திர போராட்ட தலைவரை தரம் தாழ்த்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Chella

Next Post

வீட்டு வரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை..! விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

Tue Jul 19 , 2022
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 25ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி உயர்வு முதல் மின்கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, வரும் 25ஆம் தேதி காலை 10 மணியளவில் கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி […]
’தமிழ்நாடு மின்துறையை கடனில் மூழ்கிய துறையாக மாற்றியது அதிமுக அரசுதான்’..! - முரசொலி

You May Like