fbpx

நண்பனின் மனைவி மீது ஆசை..!! கட்சியின் பெயரை சொல்லி சேட்டை..!! கடைசியில் கம்பி எண்ணும் பின்னணி..!!

கோவை மாவட்டம் துடியலூர் சேரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி. இவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சத்தியமூர்த்தியின் நண்பரான எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷா சத்தியமூர்த்தியின் குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும், அவர் துடியலூர் பேருந்து நிலையத்தில் பாத்திரக்கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், சத்தியமூர்த்தி வீடு வாங்க திட்டமிட்டு இருந்தது நண்பன் ஹசன் பாதுஷாவுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, தனக்கு நிறைய இடம் தெரியும், நான் உடனே உனக்கு வீடு வாங்கித் தருகிறேன் என்று ஹசன் பாதுஷா கூறியுள்ளார். இந்நிலையில், சத்தியமூர்த்தி வீட்டில் இல்லாத நேரங்களில் அவரது மனைவி ஆர்த்தியுடன் சகஜமாக பேசி பழகி வந்துள்ளார்.

மேலும், அவரது தொலைபேசி எண்ணையும் பெற்றுக் கொண்ட ஹசன் பாதுஷா அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி ரூ.2 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டார். பின்னர், தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இது குறித்து கணவன் சத்தியமூர்த்திக்கு தெரிய வர கணவன் – மனைவி இருவரும் வாங்கிய பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளனர்.

அதற்குத் தர மறுத்த ஹசன் பாதுஷா தான் எஸ்.டி.பி.ஐ கட்சியில் உள்ளதாகவும், அனைத்து இடத்திலும் செல்வாக்கு உள்ளதாகவும், ஒன்றும் செய்ய முடியாது என கூறி தர மறுத்துள்ளார். இது குறித்த கணவன் – மனைவி துடியலூர் உள்ள ஜமாத்தில் புகார் அளித்தனர். பின்னர், உக்கடம் பகுதியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் வைத்து பேசி பணத்தை திருப்பித் தருவதாக ஒப்புக் கொண்டு உள்ளார் ஹசன் பாதுஷா.

பின்னர், சத்தியமூர்த்தி மனைவி செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாற வற்புறுத்தியுள்ளார் ஹசன் பாதுஷா. இதனால் மனமுடைந்த கணவர், மனைவியின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு குடியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை விஷயமாக சத்தியமூர்த்தி துடியலூருக்கு வந்துள்ளார்.

அப்போது, அவரைப் பார்த்த ஹசன் பாதுஷா அவரையும், அவரது மனைவியும் பிரித்து விடுவதாகவும், கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தாக்கியுள்ளார். இதில், சிறிய காயம் ஏற்பட்ட சத்தியமூர்த்தி, இது குறித்து மனைவி மற்றும் அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கணவர் – மனைவிக்கு இடையே மேலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர்.

இந்நிலையில், சத்தியமூர்த்தியின் மனைவியிடம் ஹசன் பாதுஷா கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வா.. இருவரும் சேர்ந்து வாழலாம் என கூறியதாகவும், தனக்கு தெரியாமல் பணத்தைப் பெற்று தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து, மனைவியை பிரித்து நடுத் தெருவில் நிறுத்திய ஹசன் பாதுஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹசன் பாதுஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : கடல் மட்டத்திற்கு கீழே இருக்கும் மிக தாழ்வான பகுதி எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

English Summary

Hasan Badusha, who also got his phone number, wooed him and took Rs 2 lakh.

Chella

Next Post

தமிழக அரசு பணிக்கான தகுதியில் இந்தி.. இணை இயக்குநர் பணியிடை நீக்கம்..!! - அமைச்சர் கீதாஜீவன்

Mon Nov 4 , 2024
In social welfare department recruitment notification required educational qualification is wrongly uploaded as Hindi. Following this controversy, Minister Geethajeevan has given an explanation

You May Like