fbpx

உல்லாச ஆசை..!! வலையில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட ஆண்கள்..!! தனியாக வரச்சொல்லி என்ன செய்வார்கள் தெரியுமா..?

தஞ்சையைச் சேர்ந்தவர் விக்னேஷ் என்பவர் புதுச்சேரி பிரைவேட் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது, வாட்ஸ்அப் நம்பருக்கு கடந்த 13-ஆம் தேதி “உல்லாசமாக இருக்க பெண் தேவையா?” என்று கேட்டு மெசேஜ் வந்துள்ளது. அத்துடன், அந்த மெசேஜில் நம்பர் ஒன்றும் தரப்பட்டுள்ளது. எனவே, இந்த மேனேஜர் அதிலுள்ள நம்பருக்கு போன் செய்துள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய பெண், 5-க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடைய போட்டோக்களை அனுப்பி இதில் யாராவது ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார்.

விக்னேஷும் ஆசையோடு, தனக்கு பிடித்த பெண்ணின் புகைப்படத்தை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார். பிறகு ஒரு நைட்டுக்கு ரூ.10,000 என விலை பேசி, முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். பிறகு, முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு வந்து காத்திருக்கும்படி அப்பெண் கூறியிருக்கிறார். இதையடுத்து, வின்கேஷும் அங்கு சென்று காத்திருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் அப்பெண் வரவில்லை.

இப்படியே 5 மணி நேரம் அதே இடத்தில் காத்துக் கிடந்துள்ளார். அதற்கு பிறகுதான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபர் கிரைம் போலீசுக்கு புகாரளித்தார். இதையடுத்து, சைபர் கிரைம் போலீசாரும், அவரது வங்கிக் கணக்கு மற்றும் அவர் தொடர்பு கொண்ட எண் ஆகியவற்றை வைத்து, சம்பந்தப்பட்ட பெண் யார் என்று விசாரித்தபோது, காயத்ரி என்ற பெண் சிக்கினார். இவர் கடலூரை சேர்ந்தவர். வயது 35. 100-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி பணம் பறித்து வந்திருக்கிறார்.

சோஷியல் மீடியாவில் இன்ஸ்டாவில் பெண்களின் போட்டோக்களை டவுன்லோடு செய்துக்கொண்டு, இப்படியான மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். காயத்ரியின் வங்கிக் கணக்கை சோதனையிட்ட போது, கடந்த 6 மாதங்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என 4 லட்சம் ரூபாய்க்கு மேல் வந்துள்ளது. பெண் ஆசை காட்டியே லட்சக்கணக்கில் மோசடி செய்த காயத்ரியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : ’எங்க அம்மாவுக்கே எந்த பிரச்சனையும் இல்ல’..!! ’இந்த மம்மி ஏன் வித்தியாசமா கூவுது’..!! ஷகிலாவுக்கு பதிலடி கொடுத்த மணிமேகலை..!!

English Summary

He has been involved in this kind of fraud by downloading photos of women on Instagram on social media.

Chella

Next Post

மேற்கூரை சோலார் பேனல்..!! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பை கவனிச்சீங்களா..? வழிகாட்டு நெறிமுறைகள் இதோ..!!

Tue Sep 24 , 2024
Guidelines for installing rooftop solar panels in Tamil Nadu have been published.

You May Like