fbpx

வயசானாலும் உங்க அழகும், ஸ்டைலும் இன்னும் உங்கள விட்டு போகல தல!… கடைசில அடிச்ச அந்த சிக்ஸர்!…வைரலாகும் வீடியோ!

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸின் இறுதியில் தல தோனி அடித்த சிக்ஸர்களின் வீடியோவை சிஎஸ்கே அணி ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 16 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டிப்போட்டுக் கொண்டு களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் 55வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி நல்ல தொடக்கத்துடன் தனது இன்னிங்ஸை விளையாட ஆரம்பித்தது. பின்பு பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே(25 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட்(24 ரன்கள்) ஆட்டமிழக்க, கேப்டன் தோனி களமிறங்கினார்.

18 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் அடித்திருந்த சென்னை அணிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், களத்தில் இறங்கிய கேப்டன் தல தோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக மாஸ் காட்டி விளையாடினார். 18.3 ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்துபறக்கவிட்டார். பின்னர் அதே ஓவரில் அவர் அடித்த மற்றொரு சிக்ஸர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. 9 பந்துகளில் 2 சிக்சர்களை பறக்க விட்டு 20 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதனையடுத்து 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, சென்னை அணியின் அசத்தலான பந்துவீச்சால் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது. தற்பொழுது தோனி அடித்த அந்த சிக்ஸர்களின் விடியோவை சிஎஸ்கே ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

Kokila

Next Post

இது எப்படி சாத்தியம்!... 3 பேரின் DNA-களுடன் பிறந்த முதல் குழந்தை!... இங்கிலாந்து மருத்துவ துறையில் அதிசயம்!

Fri May 12 , 2023
இங்கிலாந்து மருத்துவ துறையின் புதிய முயற்சியாக மூன்று பேரின் DNA-களுடன் முதல் முறையாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த குழந்தை கருக்களை உருவாக்குவதற்கான சிறப்பு ஐவிஎஃப் (IVF) நுட்பத்தைப் பயன்படுத்தியும், மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் மூலமாகவும் பிறந்துள்ளது. மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன் என்பது ஒரு துணை இனப்பெருக்க தொழில்நுட்பமாகும். இது குழந்தைகளுக்கு பலவீனம் மற்றும் பக்கவாதம் போன்ற மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்கும் முயற்சியைக் நோக்கமாக கொண்டுள்ளது. […]
இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் திருடனை கண்டுபிடித்த போலீஸ்..! சுவாரசிய சம்பவம்..!

You May Like