தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் நடிகை தேவயானி. இவர், விக்ரமுடன் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார். ஒன்றாக சேர்ந்து வேலை செய்தபோது ராஜகுமாரன்-தேவயானி இடையே காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு வீடு உள்ள நிலையில், சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பண்ணை வீடு ஒன்றும் உள்ளது. அந்தியூர் கிராமத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ராஜகுமாரன் மற்றும் தேவயானிக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று உள்ளது.
Read More : மின் இணைப்புடன் Aadhaar எண்ணை இணைப்பது எப்படி..? நீங்களே வீட்டிலிருந்து செய்யலாம்..!!
வெயில் காலத்திலும் மழை வேண்டும் என்றால் தேவயானி பண்ணை வீட்டில் ஒரு ஸ்பெஷல் விஷயம் உள்ளது. ஸ்விட்ச் போட்டால் பண்ணை வீட்டுக்கு நடுவில் மழை கொட்டும் அளவிற்கு செயற்கையாக பைப்புகள் மூலம் செட்டப் செய்து வைத்துள்ளனர். அதுகுறித்து ராஜகுமாரன் ஒரு பேட்டியில் கூற ரசிகர்கள் சூப்பர் வீடு என கமெண்ட் செய்து வருகின்றனர்.