பெற்றோர்கள் பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது தங்களின் குழந்தைகள் சரியாக சாப்பிடவில்லை என்பது தான். ஆம், என்ன கொடுத்தாலும் என் குழந்தை சாப்பிடவில்லை, சாப்பிட்டாலும் எடை கூடவில்லை, இரவு சரியாக தூங்கவில்லை என்று பல பெற்றோர்கள் புலம்புவதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இது அனைத்திற்கும் ஒரே காரணம் தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், குழந்தைகளுக்கு இருக்கும் இது போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரே காரணம் குடல் புழுக்கள் தான். கொக்கி புழு, சாட்டை புழு, நாடாப்புழு என்று பல்வேறு வகையான புழுக்கள் குடலில் உருவாக பல காரங்கள் உள்ளது.
அந்த வகையில், குழந்தைகள் இனிப்பு அதிகம் சாப்பிடுவது, செருப்பு போடாமல் நடப்பது, கைகளை சரியாக சுத்தம் செய்யாமல் சாப்பிடுவது, அசுத்தமான குடிநீர் குடிப்பது போன்ற காரணங்களால் வயிற்றில் புழுக்கள் ஏற்படும். து போன்ற புழுக்கள் குழந்தைகளின் வயிற்றில் அதிகம் இருந்தால் அவை உண்ணும் உணவில் கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். இதனால் உடல் எடை கூடாது. மேலும், சோர்வு, பசியின்மை போன்ற பாதிப்புகள் இருக்கும். இதற்காக சந்தையில் மாத்திரைகள் விற்கப்படுகிறது. ஆனால் அதை நாம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் கொடுக்க வேண்டும்.
இதனால் நீங்கள் உங்கள் குழந்தைகளின் வயிற்றில் இருக்கும் குடற்புழுக்களை வெளியேற்ற ஒரு சில ஹோம் ரெமிடியை பின்பற்றலாம். அந்த வகையில், நீங்கள் இரண்டு தேக்கரண்டி வேப்பங் கொழுந்தின் சாறை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால், அது குடலில் உள்ள புழுக்களை மலம் வழியாக வெளியேற்றி விடும். இதற்க்கு பதில், நீங்கள் பப்பாளி இலையை ஜூஸாக கொடுத்தாலும் குடற்புழுக்கள் அழிந்துவிடும். மணத்தக்காளி கீரை மற்றும் காயை தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாறை குடித்தால் குடற்புழுக்கள் அழிந்துவிடும். இதை உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்காமல் நீங்களும் குடிக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொடுக்க வேண்டும்.
Read more: “இந்த அரிசியை சாப்பிட்டால், புற்றுநோயை கூட தடுக்கலாம்” டாக்டர் சிவராமன் அட்வைஸ்..