fbpx

டி.ஜி.பி. கொலையில் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தொடர்பு …

ஜம்மு-காஷ்மீரில் கொலை செய்யப்பட்ட ஹேமந்த்குமார் கொலைக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் டிஜிபி ஹேமந்த் காலை கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் கிடந்தார். தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றியது. அமித்ஷா இன்று பேரணி செல்ல இருந்த நிலையில் போலீஸ் உயரதிகாரி கொலையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது. வீட்டில் வேலை செய்த பணியாள் யாசிர் கொலை நடந்தது முதல் காணவில்லை . எனவே இக்கொலைக்கு அந்த நபர் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் முதலில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. குற்றவாளியைத் தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கொலைக்கு லஷ்கர் இ தொய்பா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அமைப்பின் கிளை அமைப்பான மக்கள் பாசிச எதிர்ப்பு படை இந்த கொலையை செய்ததாக தெரிவித்துள்ளது. ஜம்முவில் இன்று நடைபெற்ற இந்த கொலையை எங்கள் அமைப்பு சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது. கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்திய சம்பவங்களும் எங்களால் நிகழ்த்தப்பட்டதுதான் என தெரிவித்துள்ளனர்.

இனி வரும் காலங்களில் இந்த தாக்குதல்கள் அதிகரிக்கும்  என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பினர் அமித்ஷா வருகையை ஒட்டி நிகழ்த்தப்பட்ட ஒரு சிறிய பரிசு என்பதை குறிப்பிட்டுள்ளது. இனி எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Post

மோடியின் நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது….காஷ்மீரில் அமித்ஷா பேச்சு !

Tue Oct 4 , 2022
ஸ்ரீநகரில் தீவிரவாதிகளுக்கு எதிராக மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் முன்பை விட தற்போது பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது என அமித்ஷா பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு – காஷ்மீர் சென்றார். ரஜோரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர்அங்கு பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில் , ’’ஜம்மு காஷ்மீர் […]

You May Like