பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நபர்களில் ஒருவரான தனலெட்சுமி ஈரோடு மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர். இவர் தனது ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமாகியவர்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானியராக உள்ளே நுழைந்துள்ளார்.
தொடக்கத்தில் தனலெட்சுமி உள்ளதை அப்படியே பேசி வருகிறார் என்றும், தைரியமாக தவறை சுட்டிக்காட்டுகிறார் மற்றும் டாஸ்க்குகளிலும் மிரட்டி வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்கள். ஆனால், சமீப காலங்களில் தனலெட்சுமி அதிகமாக கோபப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறத்ய். மேலும், கோபத்தை குறைக்க வேண்டும் என பலர் அறிவுரை கூறியும், கோபத்தை கட்டுப்படுத்தாமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தனலெட்சுமியின் நண்பர்கள் 3 பேர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி இன்று வைரலாகி வருகின்றது.பேட்டியில் பேசியுள்ள அவர்கள், தனலெட்சுமி ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை, பெரிய ஈவன்ட்டுகளை தனியாக நடத்தும் அளவிற்கு பணம் இருக்கிறது. மேலும் தனலெட்சுமி இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த திரைப்படங்கள் வெளி வரவில்லை.
இவரின் தந்தை மெக்கானிக் ஷாப் வைத்துள்ளார். அப்பா அவர்களை விட்டு பிரிந்துள்ளார் என்று கூறியதெல்லாம் பொய். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக அப்படி கூறியிருக்கிறார். பிக்பாஸ் உள்ளே அவர் சென்றதும் நாங்கள் பிக்பாஸ் பார்ப்பதையே நிறுத்திவிட்டோம் என்றும் அவரது நண்பர்கள் பேட்டியில் கூறியுள்ளனர்.
தற்போது அவரது நண்பர்கள் பேசிய வீடியோ வைரலாகி, நெட்டிசன்கள் இதுகுறித்து அவர்தான் விளக்கம் வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.