தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் அருகே கம்மாளம்பட்டி கிராமத்தில் வெங்கடாசலம் என்பவருக்கு சரண்யா என்று மகள் இருக்கின்றார். சரண்யா சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாவது வருடம் படித்து வருகின்றார். கல்லூரி முடிந்த அவர் நேற்று இரவு நேரத்தில் பேருந்தில் இருந்து இறங்கி தன் அண்ணனுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் குடிபோதையில் பத்திருக்கும் அதிகமான இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.
சரண்யாவை பார்க்க அந்த போதை ஆசாமிகள் அவரை தகாத முறையில் கிண்டல் செய்துள்ளனர். இதனால் சரண்யா ஆத்திரம் அடைந்து அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சரண்யாவின் அண்ணனை அவர்கள் அடிக்கும் சரண்யாவை படுமோசமாக திட்டியும் இருக்கின்றனர். விஷயம் கேள்விப்பட்டு வந்த சரண்யாவின் தாய் மற்றும் உறவினர்கள் தட்டி கேட்க அவர்களையும் அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் விரட்டி அடித்துள்ளனர்.
இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய போது காவல்துறை முன்னிலையிலேயே பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் அடித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கம்மாளம்பட்டி கிராம மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர். போலீசார் அப்போது பாதிக்கப்பட்ட சரண்யாவிடம் சாதி பாகுபாடு காட்டியும் நீ என்ன பெரிய கதாநாயகியா என்று கேட்கும் அவமானப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இது பற்றிய செய்தியாளர்களிடம் பேசிய சரண்யா இது போன்ற நிகழ்வு அடிக்கடி நடப்பதாகவும் இதை முற்றிலும் தடுக்க போலீஸ் சார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதில் காயமடைந்த நபர்கள் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.