fbpx

விவாகரத்து வழக்கு: தனுஷ் ஐஸ்வர்யா நேரில் ஆஜராக உத்தரவு!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும்  விவாகரத்து வழக்கில், அக்டோபர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ந் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி காந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு, இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர்.

இது அவர்களது ரசிகர்களை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து, இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தள்ளி வைத்து,  இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை முதன்மை குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார்.

Next Post

Lok Sabha | "குடும்ப அரசியல், ஊழல்,மோசடி இதுதான் திமுக அரசின் சாதனை" - நெல்லை பிரச்சாரத்தில் மோடி குற்றச்சாட்டு.!

Mon Apr 15 , 2024
Lok Sabha: இந்தியாவில் 18 வது பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி முடிவடையே இருக்கிறது. வர இருக்கின்ற ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவிற்கான நாள் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. முதல் கட்ட […]

You May Like