fbpx

குட் நியூஸ்…! ரூ.3,000 இருந்தால் போதும்…! இ-சேவை மையங்களை அமைக்கலாம்…! முழு விவரம் உள்ளே….!

இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ‌

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமையானது ‘அனைவருக்கும்‌ இ-சேவை வழங்கும்‌ திட்டத்தின்‌” கீழ்‌ அனைவரும்‌ விண்ணப்பிக்க வலைத்தளம்‌ ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின்‌ முகம்‌ இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள்‌ அனைத்தும்‌ இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம்‌ வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

இத்திட்டம்‌ படித்த இளைஞர்கள்‌, தொழில்முனைவோர்‌ போன்றவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. மேலும்‌ இ-சேவை மையங்கள்‌ இல்லாத தொலைதூரப்‌ பகுதிகளில்‌ இசேவை மையங்கள்‌ அமைக்க உதவுகிறது. மேலும்‌ மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள கிராமப்புற பகுதிகளில்‌ இ-சேவை மையங்களின்‌ எண்ணிக்கையை அதிகரிக்கவும்‌, பொதுமக்கள்‌ வரிசையில்‌ காத்திருக்கும்‌ நேரத்தைக்‌ குறைக்கவும்‌.பொதுமக்கள்‌ அனைவரும்‌ அவர்களின்‌ வீட்டின்‌ அருகாமையிலையே விரைவான மற்றும்‌ சிறந்த சேவையை வழங்க இத்திட்டம்‌ வழிவகை செய்கிறது.

இத்திட்டத்திற்கு கீழ்‌ விண்ணப்பிக்க, கணினி , அச்சுப்பொறி,வருடி சாதனம்‌, கைரேகை அங்கீகார சாதனம்‌ , இணைய வசதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்திருக்க வேண்டும்‌ மற்றும்‌ குடிநீர்‌ வசதி, பார்வையாளர்‌ அமரும்‌ நாற்காலி, சாய்வுதளம்‌ போன்ற குறைந்தபட்ச அடிப்படை வசதிகள்‌ இருக்க வேண்டும்‌. மேலும்‌ மைய ஆப்ரேட்டர்‌ கணினி அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இத்திட்டத்தின்‌ தகுதி நிபந்தனைகளை அனைத்தும்‌ அறிய கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தவும்‌‌.

Vignesh

Next Post

மார்ச் 28ல் வானில் நிகழவுள்ள ஆச்சரியம்!... பூமிக்கு அருகே 5 கோள்கள் ஒன்றாக தோன்றும் அரிய நிகழ்வு!...

Fri Mar 24 , 2023
வரும் 28ம் தேதி பூமிக்கு அருகில் 5 கோள்கள் ஒன்றாக தோன்றும் என்றும் இந்த அரிய நிகழ்வை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு அனைவரும் பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 28ஆம் தேதி செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கோள்கள் ஒன்றாக பூமிக்கு மிக அருகில் தோன்றும் அரிய வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது வரும் 28ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு […]

You May Like