தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மமே மீண்டும் வெல்லும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்..
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரண்டாக பிரிந்துள்ள நிலையில், கடந்த வாரம் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.. ஆனால் அவருக்கு நேரம் ஒதுக்கப்படாததால் டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்து கொண்டு சென்னை திரும்பினார்.. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், மோடி சென்னை வரும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் மோடி சந்திப்பார் என்று கூறப்பட்டது.. ஆனால் அதுபோன்ற சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.. நேற்று செஸ் ஒலிமிபியாட் விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்த போது அவரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி சென்றார்..
இதற்கிடையே, பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்று கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பு நீதிபதிகள் அறிவுறித்தினர்…
இந்நிலையில் சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு அகமதாபாத் திரும்பிய பிரதமர் மோடியை வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையம் சென்றார்.. பிரதமரை வழியனுப்பி வைத்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது, பேசிய அவர் “ பிரதமர் எனது உடல்நிலை குறித்து பிரதமர் கேட்டார்.. நன்றாக இருக்கிறது என்று சொன்னேன்.” என்று தெரிவித்தார்.. இதைத்தொடர்ந்து பொதுக்குழு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பதிலளித்த அவர்” தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தர்மமே மீண்டும் வெல்லும்.’ என்று தெரிவித்தார்..
தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என மாறி மாறி ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பினர் முறையிட்டு வருகின்றனர்.. எனினும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுகவில் யாருக்கு அதிகாரம் என்பது தெரியவரும்..