சுதந்திர தினத்தை முன்ஙனிட் அனைத்து மதுபானக்கடைகள் மூடப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 -12 விதியின் படி, 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடி விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவின் படி, எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக கடைப்பிடிக்கப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மது பானசில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மது கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் (FL-3,FL3A, FL-4A) அனைத்தும் 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்றைய தினங்களில் மூடப்படும். இந்தஉத்தரவினை மீறி மது விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.