fbpx

#திருப்பத்தூர்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் அமர்ந்து தர்ணா.. பரிதாப நிலை..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூரில் உள்ள இலங்கை தமிழர் பாளையத்தை சேர்ந்தவர் சுகதீஷ். இவரது மனைவி நளாயினி (30). இவர் நேற்று காலை தனது 4 வயது மகன் மற்றும் கைக்குழந்தையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். 

அப்போது, ​​திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தையுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மின்னூரில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனது கணவர் கூலி வேலைக்கு தினமும் வேலூருக்குச் செல்வதாகவும் நளினி கூறினார். மேலும் போக்குவரத்து செலவு அதிகம் என்பதால் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் குடியேறியதாகவும் கூறினார். 

இந்நிலையில் நிவாரண உதவித்தொகை, அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுவதாக அவர் புலம்பினார். புதிதாக குடியேறிய மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட வேண்டியவை வழங்கப்படவில்லை. தங்களுக்கு அரசு நிவாரணப் பொருட்களை வழங்கவில்லை என்று கூறியுள்ளார். 

எனவே நிவாரணம் மற்றும் பொருட்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் நளினி கூறினார். இதையடுத்து அதிகாரிகள் அவரை சமரசம் செய்து கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

மனைவியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு உறங்கிய கணவர்..!

Wed Jan 4 , 2023
தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் குமார். 32 வயதான குமார் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் பபிதா. 30 வயதான பபிதா பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். புத்தாண்டின் போது பபிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் நந்த குமார் தனது வீட்டில் தனது நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடினார். காலையில் பபிதா […]

You May Like