fbpx

ஆப்கானிஸ்தான் வீரருக்கு தனது NO.7 ஜெர்சியை பரிசளித்த தோனி!… ட்விட்டரில் பகிர்ந்து நெகிழ்ச்சி!

ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், ஐபிஎல் இல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வீரருமான ரஹ்மனுல்லா குர்பாஸ்-க்கு தோனி தனது சிஎஸ்கே அணி நம்பர்-7 ஜெர்ஸியை பரிசாக அனுப்பியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட்டராக திகழ்ந்து வருகிறார். அனைத்து நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களும் கூட தோனிக்கு ரசிகர்கள் என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு தோனி தனது ஆட்டத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், ஐபிஎல் இல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வீரருமான ரஹ்மனுல்லா குர்பாஸ்-க்கு தோனி தனது சிஎஸ்கே அணி நம்பர்-7 ஜெர்ஸியை பரிசாக அனுப்பியுள்ளார்.

குர்பாஸ் எப்போதும் தான் ஒரு எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர் என கூறி வருபவர், ஐபிஎல் தொடரில் கூட தோனியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருபவர். அப்படிப்பட்ட குருவாக பார்க்கக்கூடிய தோனி தனக்கு பரிசு அனுப்பிய அவரின் இந்த செயலுக்கு நன்றி கூறும் விதமாக குர்பாஸ் தனது ட்விட்டரில், தோனிக்கு நன்றி கூறி பதிவிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து பரிசை அனுப்பியதற்கு, நன்றி எம்.எஸ்.தோனி என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் 2023 தொடரில் கொல்கத்தா அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி 227 ரன்கள் குவித்திருந்தார். குர்பாஸ் பகிர்ந்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல்வீரர்!... புதிய கின்னஸ் வரலாற்று சாதனை படைத்த ரொனால்டோ!

Thu Jun 22 , 2023
200 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய முதல்வீரர் என்ற கின்னஸ் வரலாற்று சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐஸ்லாந்துக்கு எதிரான UEFA யூரோ 2024 தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 38 வயதான ரொனால்டோ இந்த போட்டியில் 89வது நிமிடத்தில் அடித்த ஒரு கோல் மூலம் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. […]

You May Like