ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா? என்ற கேள்வி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், தற்போது சிஎஸ்கே போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை மேலும் கவலை அடையச் செய்துள்ளது.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராகவும், கேப்டனாகவும் இருந்து 5 முறை கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. இந்நிலையில், தோனிக்கு தற்போது 43 வயது ஆகிவிட்டதால் அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரர் என்ற விதி இருப்பதால் தோனி வெறும் விக்கெட் கீப்பிங் மட்டும் செய்துவிட்டு பேட்டிங்கில் கடைசி சில பந்துகளை மட்டுமே ஆட முயற்சித்து வந்தார்.
இந்நிலையில், ஐபிஎல் மெகா இடம் நடைபெறுவதால் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க தோனி முடிவெடுத்தார். மேலும், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்களை, இந்திய அணிக்காக விளையாடாதவர் என்று கருதப்பட்டு ஊதியத்தை குறைத்துக் கொள்ள சிஎஸ்கே பிசிசிஐயின் முடிவை நாடியது. இதற்கு பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தோனி அடுத்த சீசனில் கண்டிப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பு வெளியானது.
இந்த சூழலில் தான், தோனி தமக்கு ஏற்பட்டுள்ள மூட்டு வலி காயத்தின் தன்மை குறித்து மருத்துவர்களின் அறிவுறுத்தலை கேட்டு அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து முடிவெடுப்பார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. ஆனால், தோனியின் மூட்டு வலி பிரச்சனை தீர்வது போல் தெரியவில்லை. இதனால் வரும் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ட்வீட் போட்டுள்ளது. அதில் மேஜர் மிஸ்ஸிங் என்று தோனியின் ஏழாவது நம்பர் ஜெர்சியை ட்விட்டரில் பதிவு செய்துள்ளது. இதுதான் தோனி ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது. ஒருவேளை தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்பதை தான் சிஎஸ்கே அணி மறைமுகமாக தெரிவித்து இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
Read More : ’காதலியின் காலணியை கழற்றி’..!! ’கரண்ட் ஷாக் கொடுத்து கொன்றோம்’..!! நடிகர் தர்ஷன் பரபரப்பு வாக்குமூலம்..!!