fbpx

அதிர்ச்சி…! மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த பிரபலம் காலமானார்…!

தூம் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய தயாரிப்பாளர் சஞ்சய் காத்வி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. 2004ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான படம் ‘தூம்’. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2006ஆம் ஆண்டு ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வெளியான ‘தூம் 2’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது.

இந்த இரண்டு படங்களை இயக்கியவர் சஞ்சய் காத்வி. இவை தவிர ‘தேரே லியே’, ‘மேரே யார் கி ஷாதி ஹே’ உள்ளிட்ட திரைப்படங்களையும் சஞ்சய் காத்வி இயக்கியுள்ளார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அபிஷேக் பச்சன் ஞாயிற்றுக்கிழமை திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய் காத்விக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். கடந்த வாரம் தான் இயக்குனரிடம் பேசியதாகவும், அவருக்காக இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார் ‌.

Vignesh

Next Post

மயோனைஸ் பிரியரா நீங்கள்.? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்.!

Mon Nov 20 , 2023
உலகமயமாக்கல் காரணமாக மேற்கத்திய உணவுகள் மற்றும் மத்திய கிழக்கு உணவுகள் நம் நாட்டின் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் பரவலாக கிடைக்க தொடங்கி இருக்கிறது. அவற்றின் மூலம் இந்தியாவில் அறிமுகமான ஒரு உணவுதான் மயோனஸ். இது சவர்மா அல்ஃபகம் மற்றும் மந்தி போன்றவற்றிற்கு சைடிஸ் ஆக பயன்படுத்தப்படும் ஒரு உணவாகும். இதனை பலரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக குழந்தைகள் இந்த உணவை அதிகம் […]

You May Like