சர்க்கரை வியாதி இருந்தால், அவர்களின் குழந்தைக்கும் சர்க்கரை நோய் வருமா? இதற்கு பதில் தருகிறார் டெல்லியிலுள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் அமிதேஷ் அகர்வால். குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை நீரிழிவு நோய் தாக்கும் அபாயம் அதிகமுள்ளது. மேலும், டைப் 2 டயாபடீஸ் வருவதற்கு மரபணுக்கள் மிக முக்கிய பங்கை வகிப்பதாக அகர்வால் கூறுகிறார்.
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள் அல்லது நீரிழிவு நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள நினைப்பவர்கள் மதுபானம் மற்றும் புகையிலை பழகத்தை கைவிடுங்கள். அதேப்போல் அதிக மன அழுத்த்த்தோடு இருக்காதீர்கள். மேலும், கொழுப்புகள் குறைவான உணவுகளையும் நார்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ள உணவுகளை இவர்கள் சாப்பிட வேண்டும். உடல் எடை அதிகரிக்காமல் பர்த்து கொள்ளுங்கள். தொப்பை வயிறுடன் அதிக எடையுள்ள குழந்தைகளுக்கு இன்சுலின் எதிர்ப்பு எளிதாக உருவாகும் வாய்ப்புள்ளது. டைப் டயாபடீஸ் வருவதற்கு இது முக்கியமான காரணியாகும்.
நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் இந்சுலினை சரியாக பயன்படுத்திக் கொள்ளும். இதன் மூலம் டைப் டயாபடீஸ் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். அதிக நேரம் தொலைகாட்சி பார்க்காதிர்கள்; மொபைல் போனில் நிறைய நேரம் செலவிடாதீர்கள். ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நடைபயணம் அல்லது பைக்கில் உங்கள் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் தினசரி வாழ்க்கையில் இதைப்போன்ற சில மாறுதலை கொண்டு வாருங்கள்.