நீரிழிவு நோய் இருக்கிறது என்றால் கண்டிப்பாக திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் (IDF) அறிக்கையின்படி, சுமார் 537 மில்லியன் பெரியவர்கள் சர்க்கரை நோயுடன் வாழ்கிறார்கள் மற்றும் 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 643 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த நோயானது கணையம் இன்சுலின் உற்பத்தி செய்யத் தவறினால் ஏற்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்துவதில்லை. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வை உருவாக்கி, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.இத்தகைய நீரிழிவு நோயை தடுக்க திராட்சை பலத்தை சாப்பிடலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
திராட்சை பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள். இந்த திராட்சை பழத்தை சாப்பிடுவதால் நீரிழிவு நோய்கள் தடுக்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் திராட்சை பழம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பழமாக பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த திராட்சை பழத்தில் ஊட்டசத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.திராட்சையை உங்கள் உணவில் ஏன் சேர்க்க வேண்டும்? பச்சை, சிவப்பு அல்லது கருப்பு, திராட்சை முற்றிலும் சுவையாக இருக்கும். பசியின் போது திராட்சை பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. திராட்சையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன மற்றும் அவை பெரும்பாலும் நல்ல உணவு என்று கருதப்படுகிறது.
திராட்சையின் 5 முக்கிய ஆரோக்கிய நன்மைகள்:திராட்சை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றை கொண்டுள்ளது. 100 கிராம் திராட்சையில் 3.6 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. இந்த காரணிகள் நச்சுத்தன்மை மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன.அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருப்பதால், திராட்சை உடலில் வீக்கம் ஏற்பட்டால் அதனை குறைக்க உதவுகிறது. டெக்சாஸ் வுமன் பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, வீக்கத்துடன், திராட்சை முழங்கால் மற்றும் மூட்டு வலிகளைப் போக்க உதவும் என தெரிய வந்துள்ளது.100 கிராம் திராட்சையில் 196மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. அதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு சோடியம் இருப்பதால் திராட்சை உடலின் நீர் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, மேலும் நீரிழப்பு தடுக்கிறது.
திராட்சை பழம் சாப்பிடுவதால் கண்களுக்கு மிகவும் நல்லது. அவை கரோட்டினாய்டுகள் சத்துக்களை கொண்டுள்ளதால் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.திராட்சை பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. திராட்சை பழத்திலும் ‘வைட்டமின் டி’ அதிகமாக இருப்பதால் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.ஒரு நாளில் ஒருவர் சாப்பிடக்கூடிய திராட்சையின் சிறந்த அளவு 2 கப் தான். அதற்கு மேல் திராட்சைபழத்தை சாப்பிடக்கூடாது. எடை, வளர்சிதை மாற்ற நிலை, உடல்நலக் காரணிகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் நபருக்கு நபர் அளவு மாறுபடலாம்.