திரையுலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்கும் போது, அவர்களுக்குள் காதல் மலர்வது சகஜம். இதில் ஒரு சில காதல்கள் கை சேரலாம், பல காதல்கள் பாதி வழியிலேயே நின்றுவிடலாம். அப்படி பாதியிலேயே விட்டுப் போன காதல் சல்மான் கான்-ஐஸ்வர்யாவினுடையது. இவர்கள் இருவரும் ஒரு பாலிவுட் படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
பாலிவுட்டின் க்யூட்டான காதல் ஜோடிகளை ஒருவராக இவர்கள் வலம் வரத்தொடங்கினர். இவர்கள் இருவரும் வெகுவிரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். இருப்பினும் சல்மானுடன் உறவில் இருந்தபோது ஐஸ்வர்யா இஸ்லாத்திற்கு மாறி ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
லோனாவாலாவில் உள்ள ஒரு பங்களாவில் மும்பையைச் சேர்ந்த ஒரு காஜி முன்னிலையில் திருமணம் நடந்ததாகவும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வந்தன. மேலும் அவர்கள் நியூயார்க்கில் தேனிலவிலிருந்து திரும்பிய செய்தி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐஸ்வர்யா, திருமணம் போன்ற ஒன்றை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அப்படி நடந்தால், அதை தானே அறிவிப்பேன் என்றும் தெரிவித்தார்.
அதன்பிறகு நடிகை ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்படி நடிக்கையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் அதன் பிறகு காதலர்களாக மாறினர். சில காலங்கள் டேட்டிங் செய்துவிட்டு அதன் பிறகு இருவரும் தங்களின் இரு வீட்டாரிடமும் காதல் குறித்து கூறினார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த பிறகு, அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது வரை இதுவே ஐஸ்வர்யா ராயின் கடைசி காதலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Read more: வினோத பழக்கங்கள்.. ஆபத்தான மரபுகள்.. நடுங்க வைக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை..!!