சமீபத்தில் நடைபெற்ற பாஜகவின் பொது கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமித்ஷா எதிர்காலத்தில் ஒரு தமிழர் பிரதமராக வரவேண்டும் என்று பேசி இருந்தார். இது அந்த கட்சியினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதைப் போல எதிர்க்கட்சிகள் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அவர் அந்த வார்த்தையை சொன்னாலும், சொன்னார் அப்படி என்றால் நரேந்திர மோடி பிரதமராக இருப்பது அமித்ஷாவுக்கு பிடிக்கவில்லையா? அண்ணாமலையை மனதில் வைத்து தான் அப்படி ஒரு வார்த்தையை சொன்னாரா? என்று பல்வேறு கேள்விகள் எதிர்க்கட்சியினர் இடையே ஏழத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் தான் மாநிலத்தில் செல்வாக்குடன் இருக்கும் காட்சியின் தலைமையில் தான் கூட்டணி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவிப்பது சரிதான் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார். அதோடு மேலும் அவர் தெரிவித்ததாவது தமிழர் பிரதமராக வேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியை மனதில் வைத்து தான் அமித்ஷா தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து அவருக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்த அவர், கூட்டணியை பற்றி தற்போது எதுவும் கூற இயலாது என்று கூறியுள்ளார். இன்று இருக்கும் கூட்டணி நாளை இருக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருக்கிறார்.