fbpx

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து தான் தோன்றியதா…? சீன விஞ்ஞானி வெளியிட்ட புதிய தகவல்..

கொரோனா மனிதர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்..

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா பரவி 3 ஆண்டுகளை கடந்தும் அந்த வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனா உன் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன..

தமிழகத்தில் புதிய வைரஸ் பாதிப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்..!

இந்த சூழலில் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்காவின் எரிசக்தி துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது.. அமெரிக்காவின் உளவு அமைப்பான FBI அமைப்பும் தற்போது இதனை உறுதிப்படுத்தி இருந்தது.. சமீபத்தில் பாரிஸைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், சீனாவின் வுஹானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையில் தான் கொரோனா பரவியது என்று தெரிவித்துள்ளார்.. கொரோனா வைரஸ் விலங்குகளிடம் இருந்து தான் மனிதர்களுக்கு பரவியது என்றும், தொற்றுக்கு ரக்கூன் நாய்கள் மிகவும் எளிதில் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்… பெய்ஜிங் ரசாயன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி டோங் யிகாங் பேசிய போது “ உஹானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையில் இருந்து எடுக்கப்பட்ட வைரஸ் மாதிரிகளின் மரபணு வரிசைகள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரபணு வரிசைகளுடன் கிட்டத்தட்ட ஒத்ததாக” உள்ளன, இதனால் மனிதர்களிடமிருந்து கோவிட் தோன்றியிருக்கலாம்..” என்று தெரிவித்தார்..

சீன ஸ்டேட் கவுன்சில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டோங் யிகாங், ஜனவரி 2020 மற்றும் மார்ச் 2020 க்கு இடையில் வுஹான் சந்தையில் இருந்து 1,300 சுற்றுச்சூழல் மற்றும் உறைந்த விலங்கு மாதிரிகளை விஞ்ஞானிகள் எடுத்தனர், அதைத் தொடர்ந்து அவர்கள் சுற்றுச்சூழல் மாதிரிகளிலிருந்து வைரஸின் மூன்று விகாரங்களை சோதனை செய்தனர். கொரோனா வைரஸ் ரக்கூன் நாய்களில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று பரிந்துரைத்த சமீபத்திய ஆய்வுகளை ஆதரிக்க இன்னும் போதுமான ஆதாரங்கள் இல்லை..” என்றும் அவர் கூறினார்..

உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து அறிய சீனாவிடம் இருந்து தரவுகளை நீண்ட காலமாக கோரி வருகின்றனர். அதே போல் கொரோனா குறித்து சீனா போதுமான தரவுகளைப் பகிரவில்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவைக் கடுமையாக சாடியது.. மேலும் சீனா முழுமையான தரவுகளை வழங்கினால் தான் கொரோனா எப்படி பரவியது என்பதை கண்டறிய முடியும் என்றும் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேற்கொள்ள கூடாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்..

Mon Apr 10 , 2023
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், அரசு அனுமதிக்காத எந்த பணிகளையும் அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நோய் பரவுவதாகவும்க் கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை […]

You May Like