fbpx

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மேலும் 4% உயர்த்தி அறிவிப்பு…? உண்மை செய்தி என்ன…? முழு விவரம் இதோ…

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் செதி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தி போலியானது என்றும், அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அகவிலைப்படி 01.07.2022 முதல் அமலுக்கு வரும் என்று போலி செய்தி ஒன்று பரவி வந்தது. மத்திய அரசு இது போன்ற எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை, ”என்று போலிச் செய்திகளை கண்டறியும் பத்திரிகை தகவல் பணியகம் கூறியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்” மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியானது 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அடிப்படை ஊதியத்தின் 34% இல் இருந்து 38% ஆக உயர்த்தப்படும் என்று குடியரசுத் தலைவர் முடிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறார்” என்று போலி கடிதத்தில் கூறப்பட்டுள்ளது அது முற்றிலும் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் அதிகரித்து வரும் இந்த காலத்தில் சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.. இதனை தடுக்கும் விதமாகப் பத்திரிகை தகவல் பணியகம் டிசம்பர் 2019 இல் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவைத் தொடங்கியது. அதன் நோக்கம் “பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காணப்பட்டு, அதனுடைய உண்மைத்தன்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக உருவாக்கப்பட்ட ஒன்று.

Vignesh

Next Post

#Rain Alert: 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை...! மக்கள் எல்லோரும் கவனமாக இருங்க...!

Fri Aug 26 , 2022
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like