fbpx

“ அமித்ஷாவிடம் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை..” டெல்லியில் இபிஎஸ் பேட்டி..

டெல்லியில் இன்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்..

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.. முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோரும் அவருடன் சென்றுள்ளனர்.. இன்று காலை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.. இந்த சந்திப்பின் போது, எஸ்.பி வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோரும் உடனிருந்தனர்..

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார்.. மேலும் “ கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்தோம்.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு பற்றி அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்..

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது..இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இதுகுறித்து அமித்ஷாவிடம் சுட்டிக்காட்டி உள்ளோம்.. தமிழகத்தின் அனைத்து துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை பற்றி அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து செய்தியாளர்கள் அரசியல் குறித்து பேசினீர்களா என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி அரசியல் குறித்து அமித்ஷாவிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதை பற்றி பேச முடியாது என கூறினார்..

Maha

Next Post

அடுத்த 8 மாதங்களில்..! ஐடி துறையில் மிகப்பெரிய மாற்றம்..! அமைச்சர் அதிரடி

Tue Sep 20 , 2022
தமிழ்நாட்டில் அடுத்த 8 மாதங்களில் 1,252 கிராமங்களில் தடையில்லா இணையதள வசதி கிடைக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் இ ஆஃபீஸ் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தமிழக கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி என் சிவக்குமார் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசு […]
அடுத்த 8 மாதங்களில்..! ஐடி துறையில் மிகப்பெரிய மாற்றம்..! அமைச்சர் அதிரடி

You May Like