பான் இந்தியா நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபாஸ் மீண்டும் அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார்! ஆம். கண்ணப்பா படத்தில் தான் நடித்த கேமியோ ரோலுக்கு அவர் சம்பளமே வாங்கவில்லையாம். தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடிக்கும் கண்ணப்பா திரைப்படம் ஏப்ரல் 25, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் காட்சிக்கு முன்னதாக, விஷ்ணு சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் சம்பளமே வாங்கவில்லை என்பதை வலியுறுத்தி உள்ளார்.
AskTwitter அமர்வின் போது, ஒரு ரசிகர் விஷ்ணு மஞ்சுவிடம் கண்ணப்பா படத்தில் பிரபாஸ் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்ததாக வெளியான தகவல் உண்மையா என்று கேட்டார். அப்போது விஷ்ணு இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.
மற்றொரு ரசிகர், பிரபாஸ் கண்ணப்பா படத்தில் நடிக்க ஓ.கே சொல்ல எவ்வளவு நேரம் ஆனது, ஆரம்பக் காட்சிகளைப் பார்த்த பிறகு அவர் என்ன எதிர்வினை ஆற்றினார் என்று கேட்டார். அதற்கு விஷ்ணு மஞ்சு “அதை ஏற்றுக்கொள்ள பிரபாஸுக்கு சில வினாடிகள் ஆனது; அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.” என்று பதிலளித்தார்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணப்பா படம் ஒரு வரலாற்று காவியம் ஆகும்.. மூத்த நடிகர் மோகன் பாபு தயாரித்த இந்தப் படம், இந்து புராணங்களில் வேரூன்றிய சிவபெருமானின் பக்தியுள்ள பக்தரான கண்ணப்பாவின் புராணக் கதையை மையமாக கொண்டு உருவாகி உள்ளது..
கண்ணப்பாவில் மோகன் பாபு, ஆர். சரத்குமார், அர்பித் ரங்கா, கௌஷல் மந்தா, ராகுல் மாதவ், தேவராஜ் மற்றும் முகேஷ் ரிஷி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். இந்த படத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கின்றனர், இது தான் அக்ஷய் குமாரின் முதல் தெலுங்கு படம் ஆகும்.
இந்த படத்தின் திரைக்கதையை விஷ்ணு மஞ்சு தானே வடிவமைத்துள்ளார், ஸ்டீபன் தேவஸ்ஸி படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை அமைத்துள்ளார்.
இதற்கிடையில், ஹனு ராகவபுடி இயக்கும் “ஃபௌஜி” என்ற ஒரு பீரியாடிக்கல் படத்தின் படப்பிடிப்பில் பிரபாஸ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.