fbpx

காதலனோடு மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொன்னதா..? செருப்பால அடிக்கணும்..!! பரபரப்பை கிளப்பிய எம்.எஸ்.பாஸ்கர்..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு காதலனை அடித்து விரட்டிவிட்டு, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… பாதுகாப்பு வேண்டி மாணவர்கள் போராட்டம்… உடனே பொதுவாக சொல்லப்படும் கருத்து “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது.”

சற்றே சிந்தித்து பாருங்கள். இது யார் குற்றம்..? கல்வி கற்க செல்லும் இடத்தில் காதலியுங்கள் என்று பெற்றோர்கள் சொல்லி அனுப்பினார்களா? காதலனோடு மறைவிடம் செல்லலாம் என்று கல்லூரி நிர்வாகம் சொன்னதா? வீடியோ பதிவை வீட்டிற்கு அனுப்புவேன், நெட்டில் விடுவேன் என்று அந்த காமுகன் மிரட்டினால், விட்டால் விடுடா என்று செருப்பால் அடித்திருக்க வேண்டும். அவனை மட்டுமல்ல… தப்பியோடிய காதலனையும்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கான்ஸ்டபிளை போட்டா பாதுகாப்பு தர முடியும்..? பெண்ணைப்பெற்ற தகப்பன் என்ற முறையில் சொல்கிறேன். பெண் குழந்தைகள் தற்காப்பு கலை கற்க வேண்டியது அவசியம். தும்பை விட்டு வாலை பிடிப்பதால் எந்த பயனும் இல்லை. சட்டம் கடுமையாக்கப்பட்டால் தவிர குற்றங்கள் குறையப் போவதில்லை. இதில் அரசை குறை கூறினால் அது நியாயமே இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் இந்த அறிக்கை தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது எந்த விதத்தில் நியாயம் என பலரும் அவருடைய கருத்தை விமர்சித்து வருகின்றனர்.

Read More : 2 கணவர்கள், 4 கள்ளக்காதலன்கள்..!! 3-வது கணவருக்கு வலைவிரித்த ரேணுகா..!! போலீசில் வசமாக சிக்கியது எப்படி..?

English Summary

I say this as a father of a daughter. It is important for girls to learn martial arts.

Chella

Next Post

100 நாள் வேலை முதல் இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் வரை!. மன்மோகன் சிங் எடுத்த முக்கிய முடிவுகள்!. என்னென்ன தெரியுமா?

Fri Dec 27 , 2024
Manmohan Singh: பிரதமராக இருந்தபோது, ​​டாக்டர் மன்மோகன் சிங் எடுத்த பல பெரிய முடிவுகள் குறித்து பார்க்கலாம். 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். 1991ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி அரசியலில் நுழைந்த மன்மோகன் சிங், பி.வி. நரசிம்மராவ் அரசில் நிதி அமைச்சராக பதவியேற்றார். அப்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது. பி.வி. நரசிம்ம ராவுடன் இணைந்து அன்னிய முதலீட்டுக்கு வழிவகை செய்தார். நிதியமைச்சராக இருந்தபோது, […]

You May Like