2023-24 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2024 ஆகும். இந்த தேதிக்குள் உங்கள் ITRஐத் தாக்கல் செய்யத் தவறினால், தாமதமான வருமானத்தை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி, தாமதமாக தாக்கல் செய்யும்போது, கட்டணம் ரூ. 5,000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும்.
அதோடு வருமான வரியில் refundல் இழப்பு தொடங்கி பல விதமான இழப்புகளை சந்திக்கவும் நேரிடும். சிலர் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், சிறைக்கு செல்லவும் நேரிடும். அதேபோல், உங்கள் வருமானம் முழுவதுமாக வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வேறு வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லை என்றால், காலக்கெடுவுக்குப் பிறகு உங்கள் ITRஐ எந்த அபராதமும் இல்லாமல் தாக்கல் செய்யலாம்.
அதே சமயம் தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் நெருங்கி வருகிறது. தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலக்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான தாக்கலில் தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று மத்திய நிதித்துறையும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில்தான், தற்போது தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் ரீ பண்ட் கிடைக்கவில்லை.
இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், வருமான வரி ரிட்டன் படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவல் கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம். கிட்டத்தட்ட 31 லட்சம் பேர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர்.
ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்வது அவசியம். ஆனால், இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : தமிழக மக்களே..!! மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்புகளை கவனிச்சீங்களா..? அனைவரது வீட்டிலும் இது முக்கியம்..!!